முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லியில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறினால் கைது: காவல் ஆணையர் எச்சரிக்கை

தில்லியில் வார இறுதி பொதுமுடக்க விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா எச்சரித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா
பகிர்:

தில்லியில் வார இறுதி பொதுமுடக்க விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தில்லியில் நாள்தோறும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து தில்லியில், இரவு நேரம் மற்றும் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா பேசியது,

தில்லியில் கரோனா பரவல் மிகவும் மோசமாக உள்ளது. இதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படவுள்ளது. அத்தியாவசிய தேவை தவிர அனைத்து இயக்கத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தில்லி காவல்துறை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும்.

காவல் ரோந்து பணிகள் கடுமையாக்கப்படும். ஒருவர் வீட்டை விட்டு வெளியே வந்தால் குறைந்தது 2 ரோந்து வாகனங்களையாவது எதிர்கொள்வார்கள். அத்தியாவசிய தேவைக்கு செல்கிறார்கள் என்பதை அவர்கள் நிரூபிக்காவிட்டால், அவர்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதையும் மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படாலம் என தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →