முகப்பு
தற்போதைய செய்திகள்

சண்டீகரில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு அமல்

பஞ்சாப் தலைநகர் சண்டீகரில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 16 ஏப்ரல், 2021 at 3:14 PM
சண்டிகரில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு அமல்
பகிர்:


பஞ்சாப் தலைநகர் சண்டீகரில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தில்லியிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

Advertisement

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. கரோனா பரவல் அதிகரித்ததால், வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  

வார இறுதி  நாள்களில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த உத்தரவு இன்று இரவு முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.