ஐசிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு 
தற்போதைய செய்திகள்

ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12ஆம் வகுப்பிற்கு ஒத்திவைப்பு

ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்  ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

ANI

ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைத்தும் அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுமுடக்கமும், பல மாநிலங்களில் இரவுநேர பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து சிபிஎஸ்இ தொடர்ந்து, ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில்,

நாடு முழுவதும் கரோனா பரவி வருவதால் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் 12ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

10ஆம் வகுப்பிற்கு இரண்டு விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று தேர்வு எழுதாமல், உள்மதிப்பீட்டின் மூலம் மதிப்பெண் பெற்றுக் கொள்வது அல்லது பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் தேர்வு எழுதுவது.

மேலும், தேர்வுக்கான புதிய தேதி குறித்த இறுதி முடிவு ஜூன் முதலாவது வாரத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரும்புகிறேன்... ஹேலி தாருவாலா!

கிஷன் தாஸ் - ஹர்ஷத் கான் படத்தின் வெளியீட்டுத் தேதி!

ஒரு நாள்... அவந்திகா மிஸ்ர!

வியாழ உணர்வுகள்... அஞ்சு குரியன்!

யெஸ், லோகாதான்... கல்யாணி பிரியதர்ஷன்!

SCROLL FOR NEXT