தற்போதைய செய்திகள்

கர்நாடகத்தில் மேலும் 17,489 பேருக்கு கரோனா

ANI

கர்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 17,489 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 17,489 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,41,998-ஆக உயர்ந்துள்ளது.

மேலும்,  5,565 பேர் குணமடைந்ததால், இதுவரை  மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 10,09,549-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 80 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,270-ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் 1,19,160 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT