தற்போதைய செய்திகள்

வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நிறைவு: 186 வாக்குகள் மட்டுமே பதிவு

DIN

சென்னை வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று நடத்தப்பட்ட மறுவாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதில், 186 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்றைய தினம் வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் இயந்திரங்களை இரண்டுபேர் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றனர். 
அவர்களை பிடித்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். 

இதையடுத்து, அந்த தொகுதியில் இன்று மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இன்று காலை 7 மணிமுதல் மாலை 7 மணிவரை பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாலை 7 மணி நிலவரப்படி, 186 வாக்குகள் மட்டுமே பதிவாகின. கடந்த ஏப்.6ஆம் தேதி இதே வாக்குச்சாவடியில் 220 வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவுக்கு பின், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இயந்திரங்களை பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT