தற்போதைய செய்திகள்

மேற்கு வங்க 5-ம் கட்ட தேர்தல்: 6 மணி வாக்குப்பதிவு நிலவரம்

DIN

மேற்கு வங்க 5-ம் கட்ட சட்டப்பேரவையின் 6 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் 45 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை நடைபெறுகிறது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், மேற்கு வங்க 5-ம் கட்டத் தேர்தலில், 6 மணி நிலவரப்படி 78.36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மாலை 6 மணிமுதல் 7 மணிவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க உள்ளதால், இறுதி நிலவரம் இரவு 7 மணிக்கு மேல் தெரியவரும்.

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் வரும் ஏப்ரல் 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT