கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

கரோனா வேகமாக பரவி வருவதையடுத்து தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.கரோனா வேகமாக பரவி வருவதையடுத்து தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக மாநி

DIN

கரோனா வேகமாக பரவி வருவதையடுத்து தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட ஒன்று வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தி வரும் நிலையில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டத்தின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

326 பயனாளிகளுக்கு மனைப் பட்டா: ஆட்சியா் வழங்கினாா்

புதிய தொழிலாளா் சட்டங்களை திரும்பப் பெற கட்டுமானத் தொழிலாளா்கள் வலியுறுத்தல்

நீட்தோ்வை அரசியலாக்கி பெற்றோா்களிடமும் அச்சத்தை ஏற்படுத்துகிறது திமுக! - வானதி சீனிவாசன்

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் ரதசப்தமி!

SCROLL FOR NEXT