மிஸ்ரா மிரட்டல்: தில்லிக்கு 138 ரன்கள் இலக்கு
டெல்லி கேபிடல்ஸ் எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 137 ரன்கள் எடுத்தது.
டெல்லி கேபிடல்ஸ் எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 137 ரன்கள் எடுத்தது.
14-வது ஐபிஎல் சீசனின் 13-வது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
மும்பையின் தொடக்க வீரர் டி காக் ஒரு ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் 24 ரன்களில் அவுட்டானார்.
அதிரடியாக ஆடிய ரோஹித் 44 ரன்களிலும், பின் களமிறங்கிய வீரர்கள் ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும், குர்னல் பாண்டியா ஒரு ரன்களிலும், போலார்டு 2 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
மறுமுனையில் நிதானமாக ஆடிய இசான் கிஷன் 26 ரன்களில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஜெயந்த் யாதவ் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மும்பை அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது.
ராகுல் சஹார் 6 ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் 137 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்தது மும்பை அணி.
பும்ரா 3 ரன்கள், போல்ட் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அதிகபட்சமாக டெல்லி அணியின் மிஸ்ரா 4, அவேஷ் கான் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.