தற்போதைய செய்திகள்

கோவாவில் இரவுநேர ஊரடங்கு அறிவிப்பு

ANI

கோவாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கோவாவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் கோவா முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரையரங்குகள், பார்கள், உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT