தற்போதைய செய்திகள்

மேற்கு வங்க 6-ம் கட்ட வாக்குப்பதிவு: மதியம் ஒரு மணி நிலவரம்

DIN

மேற்கு வங்கத்தில் 43 பேரவைத் தொகுதிகளுக்கான ஆறாம் கட்டத் தோ்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 57.30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் வாக்களிக்கும் இந்தத் தோ்தலில் 306 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 14,480 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்குப் பதிவு குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மதியம் 1.37 மணி நிலவரப்படி 57.30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க பேரவையில் கடந்த ஐந்து கட்டங்களாக 180 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெற்றுள்ளது. 

மீதமுள்ள 114 தொகுதிகளில் 43  தொகுதிகளுக்கு இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

எஞ்சியுள்ள 71 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26, 29 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT