சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நாளை(ஏப்.25) சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக நாளை 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக நாளை 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கரோனா அதிகரித்து வருவதால் நாளைமுதல் அனைத்து ஞாயிறுகளிலும் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் பயணிப்பதற்காக குறிப்பிட்ட வழிதடங்களில் 100 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்கள் உரிய அடையாள அட்டையுடன், முகக்கவசம் அணிந்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.