பெங்களூருக்கு 192 ரன்கள் இலக்கு 
தற்போதைய செய்திகள்

கடைசி ஓவரில் 37 ரன்கள் விளாசிய ஜடேஜா: பெங்களூருக்கு 192 ரன்கள் இலக்கு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 191 ரன்கள் குவித்தது.

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 191 ரன்கள் குவித்தது.

14-வது ஐபிஎல் சீசனின் 19-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருத்துராஜ், டூ பிளெஸ்ஸிஸ் நிதானமாக விளையாடினர். இந்நிலையில், ருத்துராஜ் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரெய்னா, டூ பிளெஸ்ஸிஸும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இந்நிலையில், ஹர்சல் படேல் வீசிய 14வது ஓவரில் ரெய்னா 24, டூ பிளெஸ்ஸிஸ் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.

பின் களமிறங்கிய ராயுடு தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினாலும் 14 ரன்களில் அவுட்டானார்.

இறுதி கட்டத்தில் அதிரடி காட்டிய ஜடேஜா, ஹர்சல் விசிய கடைசி ஓவரில் மட்டும் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடிக்க 20வது ஓவரில் 37 ரன்கள் குவித்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சென்னை அணி குவித்தது.

கடைசி வரை களத்தில் இருந்த ஜடேஜா 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 28 பந்துகளுக்கு 68 ரன்கள் குவித்தார். 

பெங்களூர் அணியின் ஹர்சல் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

SCROLL FOR NEXT