கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும் தில்லி மைதானம்
தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தை கரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தை கரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
கரோனா இரண்டாம் அலை தில்லி முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 20,201 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 380 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், தில்லி மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் வருகை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தை கரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணியில் சுகாதாரத்துறையினர் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.