தற்போதைய செய்திகள்

நிறைவடைந்தது 5 மாநில தேர்தல்கள்: மே 2-ல் வாக்கு எண்ணிக்கை

DIN

மேற்கு வங்கம், அசாம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் இன்றுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கரோனா இரண்டாம் அலை பரவலுக்கு மத்தியில், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னுதாரணமாக வைத்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.

அதன் அடிப்படையில் தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது.

இருப்பினும், அசாமில் 3 கட்டங்கள், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இறுதி கட்ட தேர்தலாக மேற்கு வங்கத்தில் 35 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாலை 6.30 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து, 5 மாநிலங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

இந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி கரோனா விதிமுறைகளை பின்பற்றி நடைபெறவுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT