அருப்புக்கோட்டை வெள்ளைக் கோட்டை காமராஜர் சிலை முன்பாகத் தொடங்கிய பேரறிஞர் அண்ணா நினைவு நாள் பேரணி. 
தற்போதைய செய்திகள்

அருப்புக்கோட்டையில் அண்ணா நினைவு நாள்: அதிமுகவினர் அமைதிப் பேரணி

அருப்புக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் பேரணி மற்றும் அஞ்சலி நிகழ்ச்சி புதன்கிழமை நகரச் செயலாளர் சக்தி பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் பேரணி மற்றும் அஞ்சலி நிகழ்ச்சி புதன்கிழமை நகரச் செயலாளர் சக்தி பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை வெள்ளைக் கோட்டை காமராஜர் சிலை முன்பாகத் தொடங்கிய இப்பேரணிக்கு விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்ந்திரன், அதிமுக நகரச் செயலாளர் சக்தி பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஒன்றியத் தலைவர்கள் யோக வாசுதேவன், சங்கர லிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வீர சுப்பிரமணியன், கருப்பசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகரின் முக்கியப் பகுதிகளான மரக்கடை பேருந்து நிறுத்தம், அகமுடையர் மகால் வழியாகச் சென்று அண்ணா சிலையில் பேரணி நிறைவடைந்தது. அதையடுத்து அண்ணா சிலைக்கு மலர் மாலை சூட்டி, வணங்கி, 3 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப் பட்டது. நகர அதிமுக நிர்வாகிகள் பலரும் திரளான தொண்டர்களும் நேரில் கலந்து கொண்டனர். அதையடுத்து சொக்கலிங்கபுரம் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோவிலில் அதிமுக நிர்வாகிகள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT