திமுக சார்பில் அண்ணா நினைவுநாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை 
தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் அண்ணா நினைவுநாள்: மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று அண்ணா நினைவு நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

DIN


ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று அண்ணா நினைவு நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அண்ணாவின் 52வது நினைவுநாளையொட்டி இன்று காலை 9 மணிக்கு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அண்ணாசிலைக்கு திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் கட்சியின் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக ஈரோடு வீரப்பன்சத்திரம், கொடுமுடி வடக்கு, மேற்கு ஒன்றியம், மொடக்குறிச்சி கிழக்கு, மேற்கு, தெற்கு, சென்னிமலை, ஈரோடு, பெருந்துறை தெற்கு, கிழக்கு, வடக்கு, ஊத்துக்குளி தெற்கு, வடக்கு, மத்திய ஒன்றியம் உள்பட 14 இடங்களில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் சச்சிதானந்தம், சந்திரகுமார், குறிஞ்சி சிவக்குமார், மாவட்ட நிர்வாகிகள் குமார்முருகேஷ், செந்தில்குமார், சின்னையன், பழனிசாமி, திண்டல் குமாரசாமி, பகுதி கழக நிர்வாகிகள் நடராஜன், தண்டபாணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திருவாசகம், இலக்கிய அணி வீரமணி ஜெயக்குமார், வில்லரசம்பட்டி முருகேசன், தொழிற்சங்க நிர்வாகி கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT