தற்போதைய செய்திகள்

விவசாயிகள் தொடர் போராட்டம்: மோடி ஆலோசனை

DIN

விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் நடத்துகிறார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் கடந்த2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் 11 கட்டமாக பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் தடுப்புகளை மீறி தில்லிக்குள் விவசாயிகள் நுழைந்த நிலையில் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இதனால் தில்லி எல்லை வன்முறைகளமாக காட்சியளித்தது. 

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் நடத்தி வருகின்றார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT