எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு 
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு

மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நாளை(பிப்.5) வரை அவையை ஒத்திவைத்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

ANI

மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நாளை(பிப்.5) வரை அவையை ஒத்திவைத்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

நேற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற தொடர் அமளியால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை இன்று (பிப்.4)  பிற்பகல் கூடியது.

மக்களவை கூடிய சிறிது நேரத்தில், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மக்களவையை நாளை வரை ஒத்திவைத்து பேரவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

இதற்குமுன் மாநிலங்களவையும் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT