பிப்.14-இல் நட்டா தலைமையில் பாஜகவின் ஆலோசனைக் கூட்டம்
வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தற்போதைய செய்திகள்பிப்.14-இல் நட்டா தலைமையில் பாஜகவின் ஆலோசனைக் கூட்டம்
வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தில்லியில் உள்ள பாஜகவின் தேசிய தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், தேசிய நிர்வாகக் குழுவினர், மாநில பொறுப்பாளர்கள், மாநில தலைவர்கள் மற்றும் மாநில பொதுச் செயலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன் பிப்ரவரி 13ஆம் தேதி கட்சியின் பொதுச் செயலாளர்களுடன் நட்டா ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அமைப்பு சார்ந்த பிரச்னைகள் மற்றும் தமிழகம், கேரளம், புதுவை, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.