முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியாவில் 4 பேருக்கு தென் ஆப்பிரிக்கா வகை கரோனா: மத்திய சுகாதாரத்துறை

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்த 4 பேருக்கு அந்நாட்டில் பரவி வரும் புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
இந்தியாவில் 4 பேருக்கு தென் ஆப்பிரிக்கா வகை கரோனா
பகிர்:

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்த 4 பேருக்கு அந்நாட்டில் பரவி வரும் புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக பிரிட்டனில் பரவி வரும் கரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்கா வகை கரோனாவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவல் மற்றும் தடுப்பூசி குறித்து இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் பேசியதாவது,

நாடு முழுவதும் தற்போது வரை 87,40,595 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக குறைந்துள்ளது. கேரளத்தில் 61,500 பேர் மற்றும் மகாராஷ்டிரத்தில் 37,383 பேர் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

ராஜஸ்தான், சிக்கிம், ஜார்க்கண்ட், மிசோரம், கேரளம், உத்தரபிரதேசம், ஒடிசா, ஹிமாச்சலப் பிரதேசம், திரிபுரா, பிகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்களில் உள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

லடாக், ஜார்க்கண்ட், அசாம், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, திரிபுரா, குஜராத் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்ட 187 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பயணிகளுக்கு தென் ஆப்பிரிக்கா வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனிடையே, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா, பிரிட்டன் கரோனா வகையிலிருந்து வேறுபட்டவை என தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →