முகப்பு
தற்போதைய செய்திகள்

நாட்டில் 1.30 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு

நாட்டில் இதுவரை 1.30 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
நாட்டில் 1.30 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி
பகிர்:

நாட்டில் இதுவரை 1.30 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

41வது நாளான வியாழக்கிழமை மட்டும் மாலை 6 மணி வரை 3,95,884 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம்1,30,67,047 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதாரப் பணியாளர்கள் 65,82,007 பேருக்கு முதல் முறையாகவும், 18,60,859 பேருக்கு இரண்டாம் முறையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்களப் பணியாளர்கள் 46,24,181 பேருக்கு முதல் முறையாக போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 13,10,634 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →