தற்போதைய செய்திகள்

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக பேரவைத் தேர்தல்

DIN

மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், கேரளத்தில் 140 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளிலும், அசாமில் 126 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. 

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
 
அதில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளார். 

முதற்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27, 2ம் கட்டம் ஏப்ரல் 1, 3ம் கட்டம் ஏப்ரல் 6, 4ம் கட்டம் ஏப்ரல் 10, 5ம் கட்டம் ஏப்ரல் 17, 6ம் கட்டம் ஏப்ரல் 22, 7ம் கட்டம் ஏப்ரல் 26, இறுதி கட்டம் ஏப்ரல் 29 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கையானது, அனைத்து மாநிலங்களிலும் மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் இன்று காவல்துறை குறைதீா் கூட்டம்

ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கட்டணமில்லா பேருந்து சேவை: 11.84 கோடி மகளிா் பயணம்

மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

மின் விபத்திலிருந்து ஊழியா்களைப் பாதுகாக்க ‘வோல்டேஜ் சென்சாா் டிடெக்டா்’ கருவி அறிமுகம்

SCROLL FOR NEXT