தற்போதைய செய்திகள்

பிரிட்டனுக்கு ஜன.8 முதல் விமான சேவை தொடக்கம்

ANI

பிரிட்டனுக்கு ஜனவரி 8ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, இந்தியா - பிரிட்டன் இடையே டிசம்பர் 22-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி முதல் ஜனவரி 7-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

இந்தியா-பிரிட்டன் இடையே ஜனவரி 8-ம் தேதி முதல் விமான சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இருப்பினும், ஜனவரி 23ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் வாரத்திற்கு 15 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். 

மேலும், இந்த விமானங்கள் அனைத்தும், தில்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த 29 பேருக்கு புது வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT