தற்போதைய செய்திகள்

புழலில் நீர் திறப்பு: வினாடிக்கு 3,240 கனஅடியாக அதிகரிப்பு

DIN

புழல் ஏரியிலிருந்து திறக்கும் தண்ணீரானது, வினாடிக்கு 3,240 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பருவ மழை காரணமாக நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகின்றது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23 அடி, புழல் ஏரியின் நீர் மட்டம் 21 அடியை எட்டியதையடுத்து முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 1 மணி முதல் நீர் திறக்கப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து, புழல் ஏரியில் வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து தற்போது 3,240 கனஅடியாக அதிகரித்துள்ளனர்.

இதற்குமுன், செம்பரம்பாக்கத்தில் நீர் திறப்பு 3,307 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT