கேரள பாஜக தலைவருக்கு கரோனா
கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனுக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனுக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்றால் நாட்டில் உள்ள பல்வேறு மாநில தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளத்தின் பாஜக தலைவர் கே.சுரேந்திரனுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரை செய்தியில்,
எனக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சமீபகாலத்தில், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.