கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

மத்திய அரசு - விவசாயிகள் இடையே 8-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது

மத்திய அரசு - விவசாயிகள் இடையே 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கியது.

ANI

மத்திய அரசு - விவசாயிகள் இடையே 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கியது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 44-வது நாளாக தில்லி எல்லைகளில் போராடி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக  மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

மத்திய அரசுடன் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற 7-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT