தற்போதைய செய்திகள்

தஞ்சாவூரில் இருந்து வழி தவறி பெருமாநல்லூர் வந்த சிறுவன், சிறுமி மீட்பு

DIN


அவிநாசி: தஞ்சாவூரில் இருந்து வழி தவறி பெருமால்லூர் அருகே கணக்கம்பாளையம் பகுதிக்கு வந்த சகோதர-சகோதரி இருவரும், அவிநாசியில் உள்ள காப்பகத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூரில் இருந்து பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் வாஷிங்டன் நகருக்கு தனது, தாயைத் தேடி அண்ணன் சந்தோஷ்(15), தங்கை தமன்னா(10) ஆகிய இருவரும் திங்கள்கிழமை வந்துள்ளனர். இவர்களைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சம்பத், கருப்பையா, கணக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகசுந்தரம், கிராம சிறப்பு காவலர் சுரேஸ் ஆகியோர் சகோதர, சகோதரி இருவரையும் மீட்டு பெருமாநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.  

விசாரணையில், இவர்களது பெற்றோர்களான செல்வம், மீனாட்சி ஆகியோர் குடும்பத்துடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்ததும், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதும் தெரிய வந்தது. மேலும் அவர்களது செல்லிடப்பேசி எண்ணை தொடர்பு கொள்ள முடியாததால், குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம், சகோதர சகோதரி இருவரும் அவிநாசியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தற்சமயம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவன், சிறுமியை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்த காவல்துறையினர்.

வழி தவறி வந்த சகோதர சகோதரிகளை மீட்டு, காவல்துறையிடம் ஒப்படைத்த, சம்பத், கருப்பையா, கணக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகசுந்தரம், கிராம சிறப்பு காவலர் சுரேஸ் ஆகியோருக்கு, பெருமாநல்லூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT