தற்போதைய செய்திகள்

தில்லி செங்கோட்டை பகுதியில் பறவைக் காய்ச்சல் உறுதி

ANI

தில்லி செங்கோட்டைப் பகுதியில் உயிரிழந்த 15 காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில கால்நடை பராமரிப்புத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் நோய் கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத், தில்லி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே தில்லி செங்கோட்டைப் பகுதியில் 15 காகங்கள் உயிரிழந்த நிலையில் கடந்த வாரம் மீட்கப்பட்டது. அந்த பறவைகளின் மாதிரிகளை சோதனை செய்ததில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்ட செய்தியில்,

செங்கோட்டை அருகே கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் எடுக்கப்பட்ட 15 காகங்களின் மாதிரிகள் சோதனைக்காக ஜலந்தர் மற்றும் போபாலுக்கு அனுப்பப்பட்டன.

சோதனை முடிவில் காகங்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே செங்கோட்டைப் பகுதிகளுக்கு பொதுமக்கள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT