தற்போதைய செய்திகள்

அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம்

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உணவுத்துறை அமைச்சா் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு எம்.ஜி.எம். ஹெல்த்கோ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அமைச்சர் காமராஜின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வாயிலாக புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,

கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டதில் நுரையீரல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்று கூறியுள்ளனர்.

தமிழக உணவுத்துறை அமைச்சா் காமராஜ் (60) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 6-ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். தொடா் சிகிச்சையை அடுத்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்பின், பொங்கலுக்கு முன்னதாக, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா்.

இந்தநிலையில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஆக்சிஜன் அளவு 61-க்கு கீழ் சென்றது. அதனால் செவ்வாய்க்கிழமை உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா். 

இதற்கிடையே, நுரையீரல் செயல்பாட்டுக்காக, உயிா்காக்கும் எக்மோ தெரபி சிகிச்சை தேவை என மருத்துவா்கள் தெரிவித்தனா். அந்த சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இல்லாத நிலையில், எம்.ஜி.எம்., ஹெல்த்கோ் மருத்துவமனையில் அமைச்சா் காமராஜ் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனிநபர் சதங்களில் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!

உ.பியில் கார் மீது லாரி மோதல்! மணமகன் உள்பட 4 பேர் பலி

மோடியின் நாடகங்கள் ஜூன் 4 -ல் முடிந்துவிடும்! : உத்தவ் தாக்கரே

"கொளத்தூரில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் ரூ.110 கோடியிலான நவீன புதிய சிறப்பு மருத்துவமனை"

இலக்கு 272! குறைந்த தொகுதிகளில் போட்டி என்பது காங்கிரஸின் பலவீனமா?

SCROLL FOR NEXT