தற்போதைய செய்திகள்

பறவைக் காய்ச்சல் 12 மாநிலங்களில் உறுதி: மத்திய அரசு

ANI

நாடு முழுவதும் 12 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹரியாணா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான பறவைகள் உயிரிழந்து வருகின்றன.

இந்நிலையில், புலம்பெயர் பறவைகளால் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் உள்ள மற்ற பறவைகளுக்கும் தொற்று பரவி வருகின்றது. இதை தடுக்கும் வகையில் உயிரிழந்த பறவைகள் கண்டெடுக்கும் சுற்றுப் புறத்தில் உள்ள அனைத்து பறவைகளையும் அழித்து வருகின்றனர்.

இருப்பினும் 12 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில், 

மத்தியப் பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், தில்லி, ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்களில் உள்ள காகம், வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT