முகப்பு
தற்போதைய செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
பகிர்:

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும்.

காவிரி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கையில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், தர்மபுரி, சேலம், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கேரள, கர்நாடக, லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.

சென்னை

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →