பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி
தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு வரும் 7 -ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில், தமிழகத்தில் 14 -ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தினசரி 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.