ரயில்வே துறையில் 5ஜி சேவை 
தற்போதைய செய்திகள்

ரயில்வே துறையில் 5ஜி சேவை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரயில்வே துறையில் 5ஜி சேவை வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் இன்று அளிக்கப்பட்டுள்ளது.

DIN

ரயில்வே துறையில் 5ஜி சேவை வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் இன்று அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் ரயில் நிலையங்கள், ரயில் சேவை, மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பயன்பாட்டுற்காக ரயில்வே துறையில் 5ஜி இணையதள சேவை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,

5ஜி இணையதள சேவை மூலம் ரயில் ஓட்டுநர்கள் மற்றும் காவலர்களுடன் தடையற்ற தகவல்தொடர்புகளை உறுதி செய்ய முடியும். இதன் மூலம் பாதுகாப்பு மேம்படுகிறது.

கூடுதலாக, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ரயில் மோதல் தவிர்ப்பு முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது ரயில் மோதல்களைத் தவிர்த்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

ரூ. 25,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT