முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லி ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலை ரூ.30ஆக உயர்வு

தில்லியில் உள்ள ரயில் நிலையங்களில் தேவையற்ற கூட்டத்தை குறைக்க நடைமேடை டிக்கெட்டின் விலையை ரூ. 30ஆக உயர்த்தி வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

தில்லியில் உள்ள ரயில் நிலையங்களில் தேவையற்ற கூட்டத்தை குறைக்க நடைமேடை டிக்கெட்டின் விலையை ரூ. 30ஆக உயர்த்தி வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக ரயில் நிலையங்களில் பயணிகளை தவிர நடைமேடை டிக்கெட் பெற்று உடன் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தில்லியில் உள்ள ரயில் நிலையங்களில் மீண்டும் நடைமேடை டிக்கெட் சேவை தொடங்கப்படும் என வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வடக்கு ரயில்வே கூறியது,

தில்லி மண்டலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களில் மீண்டும் நடைமேடை டிக்கெட் கொடுக்கும் பணி தொடங்கப்படும். மேலும், தேவையற்ற கூட்டத்தை குறைக்கும் விதமாக நடைமேடை டிக்கெட்டின் விலை ரூ. 30ஆக உயர்த்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.