முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்நாடகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்து மண்டல வானிலை மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 18 ஜூன், 2021 at 2:39 PM
கர்நாடகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
பகிர்:

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்து மண்டல வானிலை மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவக் காற்று தீவிரமடைந்து வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் தக்‌சின் கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோடகு, ஹாசன், சிக்கமகளூரு மற்றும் சிவமோகா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்து மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.