கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

‘மத்திய அரசு அனுமதித்ததும் மேக்கேதாட்டு கட்டுமானப் பணிகள்’: எடியூரப்பா சர்ச்சை பேச்சு

மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் மேக்கேதாட்டு அணை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் மேக்கேதாட்டு அணை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணிக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பிரதமர் மோடியை வியாழக்கிழமை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என மனு அளித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடன் மேக்கேதாட்டு அணை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

மேக்கேதாட்டு அணை கட்டுமானம் கர்நாடகாவின் மிக முக்கியமான திட்டமாகும். இத்திட்டத்தை எதிர்த்து தமிழக அரசால் அளித்த கோரிக்கையை பசுமைத் தீர்ப்பாயம் முடித்து வைத்துள்ளது. 

இதையடுத்து மத்திய அரசின் அனுமதி வந்தவுடன் மேக்கேதாட்டு அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

SCROLL FOR NEXT