ஐபோன் 13-க்கு பதிலாக 'ஐபோன் 2021' என்று பெயரிட வேண்டும் என ஐபோன் பயனர்கள் விரும்புவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொதுவாகவே ‘நம்பர் 13’ ராசியில்லாத எண்ணாக பலர் கருதுகின்றனர். அதனால்கூட புதிய மாடலுக்கு ஐபோன் 13 என்ற பெயரை பலர் விரும்பாததற்கு காரணமாக இருக்கலாம்.
புதிய ஐபோன் மாடலின் பெயர் குறித்து தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்திருப்பதாவது,
பிரபல போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் அடுத்த ஐபோன் மாடலுக்கு ‘ஐபோன் 13’ என்ற பெயருக்கு பதிலாக வேறு பெயர் வைக்குமாறு கணக்கெடுப்பில் 74 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இந்த கணக்கெடுப்பில், 38 சதவீதம் பேர் ஐபோன் 2021 , 26 சதவீதம் பேர் ஐபோன் 13 மற்றும் 13 சதவீதம் பேர் ஐபோன் 12எஸ் என்று பெயரிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜூன் 10 முதல் 15 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 64 சதவீதம் பேர் பழைய ஐபோன்கள் வாங்குவதை தவிர்த்து, புதிய மாடலுக்காக காத்திருப்பதாக கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.