முகப்பு
தற்போதைய செய்திகள்

பஞ்சாப் முதல்வரின் முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பஞ்சாப் முதல்வரின் முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
பகிர்:

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள  நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரபல தேர்தல் கணிப்பு வல்லுநர் பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் முக்கிய தேர்தல்களின் அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டுள்ளார். தற்போது நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி மற்றும் தமிழகத்தில் திமுகவுடன் ‘ஐ-பேக்’ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.