முகப்பு
தற்போதைய செய்திகள்

மேலும் ஓர் திரிணமூல் எம்எல்ஏ ராஜிநாமா

திரிணமூல் காங்கிரஸின் மேலும் ஓர் சட்டப்பேரவை உறுப்பினர் திங்கள்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

Updated On : 15 மார்ச், 2021 at 3:52 PM
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
பகிர்:

திரிணமூல் காங்கிரஸின் மேலும் ஓர் சட்டப்பேரவை உறுப்பினர் திங்கள்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் திரிணமூல் காங்கிரஸின் வேட்பாளர்கள் பட்டியலை மம்தா பானர்ஜி அறிவித்தார். இதில், மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால்,  எம்எல்ஏ தேபஸ்ரீ ராய் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

Advertisement

கடந்த வாரம் சில திரிணமூல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.