சூர்யகுமார், ராகுல் சஹார் உள்ளே: இங்கிலாந்து பந்துவீச்சுத் தேர்வு
இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டி20 ஆட்டம் இன்று (வியாழக்கிழமை) நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இங்கிலாந்து அணி கடந்த ஆட்டத்தில் விளையாடிய வீரர்களுடன் மாற்றம் ஏதும் இல்லாமல் களமிறங்குகிறது.
இந்திய அணியில் இஷான், சஹாலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மற்றும் ராகுல் சஹார் சேர்க்கப்பட்டுள்ளனர்.