முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லியில் பாஜகவை அசைப்போம்: மம்தா சவால்

மேற்குவங்க தேர்தலில் வென்ற பிறகு தில்லிக்குச் சென்று பாஜகவை அசைப்போம் என முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

Updated On : 18 மார்ச், 2021 at 4:31 PM
மம்தா பானர்ஜி(கோப்புப்படம்)
பகிர்:

மேற்குவங்க தேர்தலில் வென்ற பிறகு தில்லிக்குச் சென்று பாஜகவை அசைப்போம் என முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

மேற்குவங்க தேர்தல் வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கராக்பூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட மம்தா பேசுகையில்,

Advertisement

இந்தக் கூட்டத்தில் மாவோயிஸ்ட், இடதுசாரிகள் அல்லது காங்கிரஸ் நண்பர்கள் இருந்தால், அவர்களுக்கு சொல்கிறேன் காங்கிரஸ், சிபிஎம் மற்றும் பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள். 

பாஜகவிற்கு தெரியும் மம்தா என்பது மக்களின் சக்தி என்று பொருள், நான் மக்களுடன் இணைந்து சண்டையிடுவேன், தப்பி ஓடமாட்டேன்.

தேர்தலுக்காக பாஜக பணம் அளித்தால், அதை வாங்க தலை குனிய வேண்டாம். நினைவில் கொள்ளுங்கள், அது மக்களின் பணம். 

மேற்குவங்கத்தை வென்ற பிறகு, தில்லிக்குச் சென்று பாஜகவை அசைப்போம் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.