முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுவையில் பள்ளிகள் செயல்படும் நாள்கள் குறைப்பு

புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, 5 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

Updated On : 19 மார்ச், 2021 at 3:49 PM
பகிர்:


புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, 5 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கத்திற்கு பின் தொடங்கப்பட்ட புதுச்சேரி பள்ளிகளில் வாரத்திற்கு 6 நாள்கள் செயல்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மீண்டும் கரோனா அதிகரிக்க தொடங்கியதால், மாணவர்களின் நலன் கருதி வாரத்திற்கு 5 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் எனவும், சனிக்கிழமை விடுமுறை எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.

Advertisement

இதற்குமுன் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர், புதுச்சேரியில் தற்காலிகமாக பள்ளிகளை மூட வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.