முகப்பு
தற்போதைய செய்திகள்

பஞ்சாபில் மார்ச் 31 வரை அரசியல் கூட்டங்களுக்கு தடை

பஞ்சாபில் கரோனா பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மார்ச் 31 வரை அரசியல் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Updated On : 19 மார்ச், 2021 at 5:05 PM
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
பகிர்:

பஞ்சாபில் கரோனா பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மார்ச் 31 வரை அரசியல் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலால் பல்வேறு நகரங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பஞ்சாப் மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவல் காரணமாக ஏற்கெனவே  9 மாவட்டங்களில் இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கரோனா ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

Advertisement

அதன்பிறகு முதல்வர் வெளியிட்ட அறிக்கையில்,

கரோனா பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. பிற மாவட்டங்களில், உள் அரங்கில் 100 பேரும், திறந்தவெளிகளில் 200 பேர் வரை கூடுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், முகக்கவசம் அணிவதை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு, கிராமப்புறங்களில் குறைந்து காணப்பட்ட கரோனா பரவல், தற்போது அதிகரித்தது வருத்தம் அளிக்கிறது. கிராமப் புறங்களில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.