சர்பானந்தா சோனோவால் 
தற்போதைய செய்திகள்

60 ஆண்டுகளில் காங். செய்யாததை 5 ஆண்டுகளில் செய்த பாஜக: அசாம் முதல்வர்

அசாமில் 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 5 ஆண்டுகளில் பாஜக செய்துள்ளது என மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.

ANI

அசாமில் 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 5 ஆண்டுகளில் பாஜக செய்துள்ளது என மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த காலங்களில் அசாமில் செய்த வளர்ச்சிப் பணிகள் குறித்து அம்மாநில முதல்வர் சர்பானந்தா கூறியதாவது,

நாங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தபோது, ஊழல், தீவிரவாதம் மற்றும் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் போன்ற சவால்கள் இருந்தன. இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சியின் தோல்வி வெளிப்பட்டது. 

அவர்களின் 60 ஆண்டு ஆட்சியில் அவர்களால் என்ன செய்ய முடியவில்லையோ, அதை பாஜக ஆட்சி செய்த 5 ஆண்டுகளில் செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

மேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தை செயல்படுத்துவோம். தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உள்ள பிழைகளை சரி செய்வோம். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மாநிலத்தில் தங்காமல் இருப்பதை உறுதி செய்வோம் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT