முகப்பு
தற்போதைய செய்திகள்

துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம்: எதிர்க்கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கடிதம்

புது தில்லி: தில்லி அரசில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதாவிற்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவிக்கக்கோரி ஆம் ஆத்மி கடிதம் எழுதியுள்ளது.

Updated On : 23 மார்ச், 2021 at 5:01 PM
துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம்: எதிர்க்கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கடிதம்
பகிர்:

புது தில்லி: தில்லி அரசில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதாவிற்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவிக்கக்கோரி ஆம் ஆத்மி கடிதம் எழுதியுள்ளது.

தில்லி அரசு திருத்த மசோதா, 2021-இன்படி, அந்த யூனியன் பிரதேச நிா்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது; எந்தவொரு நிா்வாக நடவடிக்கை தொடா்பாக முடிவு எடுக்கும் முன்னா், அதுகுறித்து துணைநிலை ஆளுநரின் கருத்தை தில்லி அரசு பெற வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நேற்று நிறைவேற்றப்பட்டது.

Advertisement

இந்நிலையில் மாநிலங்களவையில், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிக்கக் கோரி தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கடிதம் எழுதியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.