முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் கார் மோதி 5 மாணவர்கள் பலி

ராஜஸ்தானில் பள்ளி மாணவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் புதன்கிழமை பலியாகியுள்ளனர்.

Updated On : 24 மார்ச், 2021 at 8:07 PM
ராஜஸ்தானில் கார் மோதி 5 மாணவர்கள் பலி
பகிர்:

ராஜஸ்தானில் பள்ளி மாணவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் புதன்கிழமை பலியாகியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜல்லூர் அருகே புதன்கிழமை மாலை பள்ளியிலிருந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.