அமித்ஷா 
தற்போதைய செய்திகள்

மேற்குவங்கத்தில் மம்தா இருக்கும் வரை மலேரியா இருக்கும்: அமித் ஷா

மேற்குவங்கத்தில் மம்தா இருக்கும் வரை மலேரியா நோய் இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

DIN

மேற்குவங்கத்தில் மம்தா இருக்கும் வரை மலேரியா நோய் இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜார்கிராம் பகுதியில் இன்று அமித் ஷா பேசுகையில்,

மம்தா ஆட்சி இருக்கும் வரை மலேரியாவிலிருந்து நீங்கள் விடுபடமாட்டீர்கள். அவருக்கு டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் நண்பர்கள். எங்களுக்கு வாக்களியுங்கள் 2 ஆண்டுகளில் நோய்களை ஒழிப்போம் எனக் கூறினார்.

மேலும், பிரதமர் மோடி ஒருபுறம் பழங்குடி மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறார். ஆனால், மம்தா அவரது மருமகனுக்காக பணியாற்றி வருகிறார் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT