சிங்கப்பூரிலிருந்து மருத்துவ உபகரணங்களுடன் கிளம்பியது இந்திய கடற்படையில் கப்பல்
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து மருத்துவ உபகரணங்களுடன் இந்திய கடற்படையின் கப்பல் கிளம்பியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து மருத்துவ உபகரணங்களுடன் இந்திய கடற்படையின் கப்பல் கிளம்பியுள்ளது.
இந்தியாவில் நாள்தோறும் 4 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.
இதனால் நாட்டில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன், கரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து பல நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சிங்கப்பூரிலிருந்து 3,650 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 8 ஆக்ஸிஜன் டேங்குகள் மற்றும் பல மருத்துவ உபகரணங்களுடன் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ஐராவத் கப்பல் கிளம்பியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.