தற்போதைய செய்திகள்

மும்பை சோட்டா ராஜன் நிலை என்ன?

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்ட மும்பை சோட்டா ராஜன் உயிரிழந்ததாக பரவிய தகவலுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது.

திகார் சிறையில் இருந்த சோட்டா ராஜனுக்கு கடந்த வாரம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக சிகிச்சைக்காக தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சோட்டா ராஜன் இன்று உயிரிழந்ததாக வதந்தி பரவியது.

இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தேடப்பட்டு வந்த தாதாக்களில் ஒருவரான சோட்டா ராஜன், 2015- ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி நகரில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா். அவா் மீது 68 வழக்குகள் போடப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில் மட்டும் பணம் பறித்தல் உள்ளிட்ட 28 வழக்குகள் உள்ளன. 2000-ஆம் ஆண்டில் பாங்காக்கில் அவா் ஒரு கொலை முயற்சியிலிருந்து தப்பினாா். 62 வயதான சோட்டா ராஜனுக்கு வேறு சில இணை நோய்களும் இருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT