முகப்பு
தற்போதைய செய்திகள்

மருத்துவ பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குக: ஓபிஎஸ்

மருத்துவ பணியாளர்களுக்கு போதிய மருத்துவ உபகரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:12 PM
துணை முதல்வர் ஓபிஎஸ்
பகிர்:

மருத்துவ பணியாளர்களுக்கு போதிய மருத்துவ உபகரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் மதுரையை சேர்ந்த மருத்துவர் மற்றும் சென்னை, வேலுரை சேர்ந்த செவிலியர்கள் தொற்று ஏற்பட்டு பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுரை மருத்துவர் சண்மூகப்பிரியா, சென்னை செவிலியர் இந்திரா மற்றும் வேலூர் செவிலியர் பிரேமா உயிரிழப்பு அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், மருத்துவ பணியாளர்களுக்கு போதிய மருத்துவ உபகரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.